fbpx

’உன் பெத்தவங்க திட்டுனா வேணாம்னு சொல்லிருவியா’..? பிரேக் அப் செய்த காதலியை காட்டுப்பகுதியில் வைத்து..!! காதலன் வெறிச்செயல்..!!

காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், கிஷன் சைனி உடனான காதலை கைவிட முடிவு செய்தார்.

இதுதொடர்பாக கிஷன் சைனியிடம் இளம்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நைசாக பேசி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிஷன் சைனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

உங்கள் favourite எது?... 80 கிட்ஸின் பிரபலமான வீடியோ கேம்ஸ்!

Thu Oct 5 , 2023
நிமிடத்திற்கு நூறு சேனல்கள் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் இன்றைய இளைய தலைமுறை, நேரம்காலம் தெரியாமல் வீடியோ கேம்ஸ்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தைகள் இழக்க தொடங்குகிறார்கள். எண்பதுகளில் […]

You May Like