fbpx

தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டீர்களா..? கவலைப்படாதீங்க..!! உடனே இதை பண்ணுங்க..!! பணம் திரும்ப வந்துரும்..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எங்கு சென்றாலும் கேஷ் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை இந்த ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் முறை போக்கிவிட்டது. ஆனால், பல நேரங்களில் நாம் UPI மூலமாக பணம் அனுப்பும்போது தவறான யூசரின் ID-க்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்திருப்போம். அவ்வாறு செய்துவிட்டால் பணத்தை தவறாக அனுப்பி விட்டோமே என்று நினைத்து வருந்த வேண்டிய அவசியம் இல்லை.

தவறான அக்கவுண்ட்டிற்கு நீங்கள் அனுப்பிய பணத்தை எப்படி உங்கள் அக்கவுண்ட்டிற்கு திரும்ப பெறுவது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். நீங்கள் GPay, PhonePe, PayTm அல்லது எந்தவொரு UPI அப்ளிகேஷனை பயன்படுத்தி பிறருக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்திருந்தாலும் அந்த அப்ளிகேஷனின் கஸ்டமர் கேர் சப்போட்டை கால் செய்யவும். அவர்களுக்கு போன் செய்து புகாரளிக்க வேண்டும்.

ஒரு வேளை இந்த பிரச்சனைக்கு UPI அப்ளிகேஷனின் கஸ்டமர் சப்போர்ட் தரப்பிலிருந்து உங்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உடனடியாக NPCI போர்ட்டலில் புகாரளிக்க வேண்டும். இதில் புகாரை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.

NPCI போர்ட்டலில் புகார் அளிப்பது எப்படி?

*புகாரை பதிவு செய்வதற்கு முதலில் நீங்கள் NPCI போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.

*அதன் பிறகு வாட் வி டூ (What we do) டேபை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.

*இப்பொழுது உங்கள் ஸ்கிரீனில் புதிய பேஜ் ஒன்று திறக்கும்.

*இப்போது UPI ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

*அடுத்து டிஸ்ப்யூட் ரீடிரசல் மெக்கானிசம் (Dispute Redressal Mechanism) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

*தற்போது உங்களது புகாரை நீங்கள் பதிவு செய்யலாம்.

*உங்கள் புகாரை பதிவு செய்த பிறகு சப்மிட் (Submit) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

RBI-யிடம் புகாரளிப்பது எப்படி..?

பணத்தை நீங்கள் தவறுதலாக வேறொரு அக்கவுண்ட்டிற்கு அனுப்பிவிட்டால், நீங்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் கூட புகார் அளிக்கலாம். ஆர்பிஐ-யில் நீங்கள் எழுத்துப்பூர்வமான புகாரை கொடுக்க வேண்டும். இது தவிர நீங்கள் RBI கம்ப்ளைன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (Complaint Management System – CMS)லும் புகாரளிக்கலாம் அல்லது RBI அலுவலகத்திற்கு போன் செய்வதன் மூலமாகவும் நீங்கள் புகார் அளிக்கலாம்.

Chella

Next Post

எதிர்காலத்தில் உலகத்தை ஆளும் பூச்சி இனங்கள்!… ஆச்சரியமான அறியாத தகவல்கள்!…

Thu Sep 14 , 2023
உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளில் உயிர்கள் கடந்த 1 பில்லியன் ஆண்டுகளாகதான் தோன்றி வாழ்ந்து வருகின்றன. அப்போது தொடங்கி தற்போது வரை ஏறத்தாழ இந்த புவியானது சுமார் 4 முறை பேரழிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இங்கு வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஏறத்தாழ 90%க்கு அதிகமானவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. மீதமிருக்கக்கூடிய உயிர்களில் நாமும் தற்போது வாழ்ந்து வருகறோம். ஆனால் தொடர்ந்து இந்த புவியை முழுமையாக கைப்பற்ற முயன்று வருகிறோம். […]

You May Like