fbpx

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா..? மாணவர்களே கவலை வேண்டாம்..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிடலாம்..!! தேதி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சியடையாத மற்றும் தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு வரும் 16ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு 10ஆம் வகுப்பு துணைதேர்வுகள் ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 2 முதல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் தேர்வு நடக்கும். ஜூலை 3ஆம் தேதி ஆங்கிலம் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். ஜூலை 4ஆம் தேதி கணித பாடத்துக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

ஜூலை 5ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும், ஜூலை 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடத்துக்கான தேர்வும், ஜூலை 8ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளதாக தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இனி 10 ரூபாய் நோட்டுக்களை பார்க்கவே முடியாது..!! காரணம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா..?

Chella

Next Post

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது..? அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு..!!

Sat May 11 , 2024
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதினர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித் […]

You May Like