fbpx

’ஆடை மாற்றும்போது கஷ்டமாக இருக்கும்’..!! ’வெறும் வேஷ்டி மட்டும் தான்’..!! நடிகை லாவண்யா பகீர் தகவல்..!!

சினிமா துறையில் நடித்தும் பெரிய இடத்தினை பிடிக்காமல் தமிழ் சினிமாவில் காணாமல் போன நட்சத்திரங்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில், கிட்டத்தட்ட 1997 சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை இவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் காணாமல் போய் இருக்கிறார் நடிகை லாவண்யா தேவி.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர். படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தலைநகரம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். பின்னர், 2014இல் நான் தான் பாலா படத்தில் கடைசியாக நடித்து சினிமாவில் இருந்து விலகிவிட்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பகாசுரன் படத்தில் நடித்திருந்தார் நடிகை லாவண்யா ரவி. மேலும், ஒரு சில சீரியலில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆனதாகவும், சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடிக்க கூப்பிடும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் என்றும், பல படங்களில் நான் நடித்த சில காட்சிகள் படம் வெளியாகி பார்க்கும்போது இருக்காது என்றும் கூறியிருக்கிறார். மேலும், சங்கமம் படத்தின் போது ரகுமான் சார் பாவம். அப்படத்தின் ஆட்டம் ஆடும் காட்சியில் எனக்கு கண்ணில் மண் பட்டு இன்பெக்சன் வந்தது. கேரவன் அந்த காலத்தில் இல்லாத போது ஆடை மாற்றும் போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடு போல வேஷ்டிகளை கட்டி இருக்கும். அங்கதான் ஆடை மாற்றுவோம். பின்னர் தான் இந்த கஷ்டத்தை பார்த்து மணிவண்ணன் அவரது கேரவன் எடுத்து வந்து எங்களை மாற்ற சொல்வார்.

Read More : ADMK | ’நேரம், நாள், இடம் குறியுங்கள்’..!! ’எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்’..!! அண்ணாமலைக்கு கோவை அதிமுக வேட்பாளர் சவால்..!!

Chella

Next Post

Palani: பங்குனி உத்திரத் திருவிழா!… பழநியில் இன்று தேரோட்டம்!

Sun Mar 24 , 2024
Palani: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன் குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. திரு ஆவினன் குடி, மலைக்கோயிலில் மூலவர், […]

You May Like