திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு அருகில் செந்துறை என்ற ஊர் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரங்கைய சேர்வைக்காரன் பட்டி என்ற கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். பெரியம்மாலுக்கு 65 வயதாகும் நிலையில் அவர் வீட்டிற்கு எதிரில் இருந்த கருவேலம் காட்டில் கடந்த பிப்ரவரி பதினொன்றாம் தேதி கொல்லப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இத்தகைய நிலையில் இந்த வழக்கில் மூதாட்டியின் பக்கத்து வீட்டுக்காரரான சரவணகுமார் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.
போலீசார் சரவணகுமார் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்து விசாரித்தனர். ஆனால், அவரிடம் விசாரிக்கும் போது திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது அந்த மூதாட்டியை வயதானவர் என்று கூட பார்க்காமல் கருவேலம் காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அவர் அணிந்திருந்த மூக்குத்தியை பிடுங்கிக் கொண்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது தெரியவந்துள்ளது.