fbpx

தீவிர சிகிச்சை பெற்று வரும் லொள்ளு சபா சேஷு.! மருத்துவ செலவிற்கு உதவி கேட்டு இயக்குனர் உருக்கம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷு. சின்ன திரையை தொடர்ந்து சினிமாவிலும் பல படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். எனினும் இவர் தனது சின்னத்திரை நிகழ்ச்சியின் பெயராலேயே லொள்ளு சபா சேஷு என அழைக்கப்பட்டு வருகிறார்.

வெள்ளித் துறையிலும் டிக்கிலோனா, ஏ1, நாய்சேகர் ரிட்டன்ஸ், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தவர். ஏ1 திரைப்படத்தில் இவர் பேசிய  “அச்சசோ அவரா… பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சினிமா துறையினரும் ரசிகர்களும் சேஷு குணமடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கார்த்திக் யோகி நடிகர் சேஷுவின் சிகிச்சைக்கு பண உதவி கேட்டு உருக்கமான செய்தி ஒன்றை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பல்வேறு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அதில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

Read More: Holiday: தொடங்கிய தேர்தல் திருவிழா…! தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…! விரைவில் அறிவிப்பு…!

Next Post

DMDK: தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்...!

Sun Mar 17 , 2024
மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு. இது குறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில்; பதினெட்டாவது 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் […]

You May Like