இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. சாமானிய மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.. மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வம் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருந்த நிலைய்ல் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது.. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..