தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் அட்வைஸர் பணிக்காக காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 57 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 வயது தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வயதும் பொதுப்பணி துறையைச் சேர்ந்தவர்களுக்கு 10 வயதும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல், மின்னணுவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப தொலைத்தொடர்பு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதோடு ஐ.டி 5 வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் இல்லை. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 02.02.2024 தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக Rs.67,700 முதல் Rs.2,08,700/- வரை வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய ndma.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.