fbpx

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!! உடல்நிலையில் முன்னேற்றம்..!! வீடு திரும்பினார் துரை தயாநிதி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர், கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன காரணம் என்று வெளியில் சொல்லப்படாத நிலையில், உயர் ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் தொடர்ந்து துரை தயாநிதிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அந்த வார்டில் துரை தயாநிதிக்கென தனி மருத்துவக் குழு ஒன்று 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதுமட்டுமல்லாது, மருத்துவமனையின் ஏ பிளாக்கில் பிசியோதெரபி சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அவருடன் அவரது தந்தை மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வந்தனர். மேலும், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வந்த தளம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மே 8ஆம் தேதி வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவையும் சந்தித்து, சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். இந்நிலையில், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி பூரண குணம் அடைந்து இன்று (செப்.24) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, தந்தை மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர்.

Read More : பிக்பாஸ் சீசன் 8 எப்போது..? தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விஜய் டிவி..!!

English Summary

Durai Dayanidhi, who was undergoing treatment at Vellore CMC Hospital, recovered completely and was discharged today (September 24) morning.

Chella

Next Post

லட்டு குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட கார்த்தி..!! பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு..!!

Tue Sep 24 , 2024
"Respected Pawan Kalyan, I apologize for the misunderstanding caused by my talking about Ladtu.

You May Like