“Disease X”! என்பது உலகின் ஏதொவொரு மூலையில் தற்போது பரவி வரும் தொற்று நோய் கிருமி அல்ல. உலக சுகாதார அமைப்பு அதற்கு கற்பனையான பெயர் சூட்டியுள்ளது என்று நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றை விட, 20 மடங்கு தீவிரம் வாய்ந்த, ‘டிசீஸ் எக்ஸ்’ தொற்று பரவல் ஏற்படக்கூடும் என்றும், அது உலகம் முழுதும், 5 கோடி உயிர்களை பலி வாங்கக்கூடிய தீவிரம் உடையது என்றும் பிரிட்டனின் தடுப்பூசி குழுவின் தலைவர் டாக்டர் டேம் கேட் பின்காம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ‘மிகப் பெரிய அளவிலான தடுப்பூசி போடும் பணிகள் உலகம் முழுதும் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். காரணம், ‘டிசீஸ் எக்ஸ்’ தொற்று அம்மை நோயை போல வேகமாக பரவுவதுடன், ‘எபோலா’ தொற்றை போல, 67 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்த கூடியது’ என்றும் பிரிட்டன் நிபுணர் தெரிவித்திருந்தார். இது உலகம் முழுதும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ”இந்த எச்சரிக்கையை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் டிசீஸ் எக்ஸ்’ என்பது உலகின் ஏதொவொரு மூலையில் தற்போது பரவி வரும் தொற்று நோய் கிருமி அல்ல. உலக சுகாதார அமைப்பு அதற்கு கற்பனையான பெயர் சூட்டியுள்ளது என்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். அதாவது, ‘டிசீஸ் எக்ஸ்’ என்பது ஒரு அனுமான பெயர் தான்.
உங்கள் வீட்டில் திருடர்கள் நுழைய வாய்ப்புள்ளதாக நீங்கள் நினைத்தால், என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் செய்வீர்கள்? வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்துவீர்கள், நாய்கள் வளர்ப்பீர்கள், வீட்டை பூட்டி வைப்பீர்கள், ஆயுதங்களை தயாராக வைப்பதிருப்பீர்கள் இல்லையா. அதுபோல தான், அடுத்து வரவுள்ள நோய் தொற்று கொரோனாவை விட ஆபத்து நிறைந்ததாக இருக்கும் என, பிரிட்டன் நிபுணர் தெரிவித்ததாக அரோரா விளக்கமளித்துள்ளார். மேலும், ‘டிசீஸ் எக்ஸ்’ என, கற்பனையாக பெயர் சூட்டி உள்ளனர். எதையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டுமே என்று அச்சம் தேவையில்லை என்று அரோரா அறிவுறுத்தியுள்ளார்.