கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் பாகங்கள் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி காட் சாலையில் ட்ராலி பேக்கில் கிடந்தனர் சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த நபர், சென்ற வியாழக்கிழமை முதல் காணாமல் போய்விட்டார் என அவருடைய மகன் புகார் வழங்கியிருந்தார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மலப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் தாஸ் இந்த கொலை கடந்த 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதிக்கு இடையில் நடைபெற்றுள்ளது மேலும் இந்த வழக்கு குறித்து 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் போலீஸ்காவலில் வைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் ஹோட்டலில் பணியாற்றியவர் என்றும், மற்றொரு சந்தேக அந்த ஊழியரின் நண்பர் எனவும், அடையாளம் காணப்பட்டுள்ளார் குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டதாகவும் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் சென்னையிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடுவே உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படுகிறது எனவும் கொடைக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.