fbpx

தொலைதூர கல்வி… ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! மிஸ் பண்ணிடாதீங்க

தொலைதூர கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 2025 ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இக்னோவில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Distance education… Today is the last day to apply online

Vignesh

Next Post

காண கண் கோடி வேண்டும்.. வேண்டியதை நடத்தி தரும் வடபழனி முருகன்..! இத்தனை சிறப்புகளா..?

Fri Feb 28 , 2025
Vadapalani Murugan Temple which conducts the necessary

You May Like