புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், இன்று மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
தேரோட்டம் நடைபெறும் நிலையில் இன்று திருவப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1-ம் தேதி பணி நாளாகவும், ஏப்ரல் 2-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக செயல்படும், என அறிவித்துள்ளார். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்.