fbpx

எல்லோருக்கும் கவனம்… இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..‌.! இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்…!

முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்..!

நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம்‌ என்பதால்‌ நாளை காலை 7 மணி முதல்‌ மாலை 7.00 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌, துணை சுகாதார நிலையங்கள்‌ மற்றும்‌ 2,084 சிறப்பு முகாம்களில்‌ 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு “மெகா தடுப்பூசி முகாம்‌” நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள்‌, வயது முதிர்ந்தோர்‌ மற்றும்‌ நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள்‌, முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்‌ மற்றும்‌ இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக்‌ கொள்ளவுள்ள நபர்கள்‌ தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படு கிறார்கள்‌. மேலும்‌, 12 முதல்‌ 18 வயதுடைய மாணவ / மாணவியர்கள்‌ தவறாமல்‌ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்‌ கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌, சுகாதார பணியாளர்கள்‌ மற்றும்‌ முன்களப்பணியாளர்கள்‌ ஆகியோர்‌ அனைவரும்‌ தவறாது பூஸ்டர்‌ தடுப்பூசி” செலுத்திக்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில்‌ பொதுமக்கள்‌ கூடும்‌ இடங்களில்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முககவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்‌ அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு முககவசம்‌ அணியாமல்‌ பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500- அரசு விதிப்படி அபராதம்‌ வசூலிக்கப்படும்‌. அரசு, தனியார்‌ அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து பணிபுரிய வேண்டும்‌. பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ ஆகிய கல்வியியல்‌ நிலையங்களில்‌ அனைத்து மாணவர்களும்‌ ஆசிரியர்களும்‌ முககவசம்‌ அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம்‌ உறுதிபடுத்த வேண்டும்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தனியார் முதலீட்டு நிறுவனம் 6,000 கோடி ரூபாய் மோசடி...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sat Aug 6 , 2022
வேலூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றின் 6,000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினார். மனுதாரர் தனது மனுவில், மோகன்பாபு ஒருவருடன் அவரது நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார். ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம் […]

You May Like