fbpx

BJP உடன் கூட்டணி வைத்த த.மா.கா..!! கடுப்பில் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்த முக்கிய புள்ளி..!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சியில் இருந்து விலகிய தமாகா தலைமை நிலைய செயலாளர் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆலோசனைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சார பணிகள் என தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளன.

தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமாகாவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தமாகா பாஜக அணியில் இணைந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சமீபத்தில் அறிவித்தார். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது தான் என பின்னர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தமாகா தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பாஜகவுடன் தமாகா கூட்டணி வைத்ததை கண்டித்து அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தான், 1996 முதல் மூப்பனாரின் தலைமையை ஏற்று தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். அதே போல மூப்பனாரின் மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தலைமை நிலைய செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பாஜக கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே, கட்சியில் இருந்து விலகுகிறேன் என தனது விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார் அசோகன். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோகன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் சிலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

English Summary : GK Vasan party head office secretary Asokan has joined the Congress party.

Read More : Lok Sabha | சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்..!! எந்த தொகுதியில் போட்டி..? மதிமுக விளக்கம்..!!

Chella

Next Post

Sarathkumar | ’வணங்கான்’ படத்தில் சரத்குமாரின் முதல் மனைவி..!! கதையில் முக்கிய கதாபாத்திரமே இவர்தானாமே..!!

Thu Feb 29 , 2024
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் பாலா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில், அவர் விலகியதால், அந்த வாய்ப்பு அருண் விஜய்க்குப் போனது. அதேபோல, சூர்யா ஒப்பந்தமாகியிருந்த சமயத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருந்தார். அவரும் தேதி பிரச்சனைகளால் ஒதுங்கினார். கடந்த […]

You May Like