fbpx

திமுக – பாஜக கூட்டணியா?… இருதுருவங்களாக உள்ளோம்!… கதவு திறந்தே உள்ளது!… அண்ணாமலை மாஸ்டர் பிளான்!

வரும் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பதில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக தனது கட்சியின் பலத்தை வலுப்படுத்தும் வகையில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் ஒரு முன்னாள் எம்.பி., பாஜகவில் இணையும் நிகழ்ச்சி டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

மத்திய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். தமிழக பாஜக மக்களவை பொறுப்பாளர் அரவிந்த மேன்ன, தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம், ஓபிசி மோர்ச்சா பிரிவு தமிழக தலைவர் சாய் சுரேஷ், டெல்லி தென்னிந்திய பிரிவை சேர்ந்த தண்டபானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று பாஜகவில் 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி., தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் மிகுந்த அனுபவம் மிக்கவர்கள். 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று பிரதமர் மோடி வரவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்தில் இவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவில் ஒரு கட்சி(அதிமுக) இணையுமா என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி கேட்கபட்டது. அவர் அளித்த பதிலில் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று எங்களுடன் வருவோருக்கு கதவு எப்போதும் கதவு திறந்தே இருக்கும். என்றுதான் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டு எந்த கட்சியின் பெயரையும் தெரிவிக்கவில்லை

இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை. திமுக கூட்டணியில் இருந்து கூட யாரும் வரக்கூடாது என்பது இல்லை. அதேவேளையில் கொள்கை, கருத்தியல் ரீதியில் நாங்களும் திமுகவும் இருதுருவங்களாக உள்ளோம். திமுக எங்கள் கூட்டணிக்கு வரப்போவதும் இல்லை, நாங்களும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. கூட்டணி விஷயத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு கட்சியும் மக்களவை தேர்தலை பார்த்து சூழலுக்கு ஏற்ப தங்களைது கூட்டணியை முடிவு செய்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது பாஜகதான்.

2024 தேர்தலில் இக்கூட்டணிக்கு அதிமுக வருவதும் வராதது அவர்களின் விருப்பமாகும். இதனால் மத்திய அமைச்சர் அமித்ஷா கூடியதை யாரும் ட்விஸ்ட் செய்யவேண்டாம். பொதுவான கேள்விக்கு ஒரு பொதுவான பதிலைதான் கூறியுள்ளார். பாஜகவை பொறுத்தவகையில், மைனாரிட்டி, மெஜாரிட்டி அடிப்படையில் அரசியல் செய்வது கிடையாது. பாஜக மதத்தை ஜாதியை வைத்து பிரித்து பார்க்கவில்லை. மக்களின் வளர்ச்சிக்கு பாஜக பூர்த்தி செய்யுமா என்று தாம் பார்க்கின்றனர். 2024 தேர்தல் களம் வித்தியாசமானது பிரதமர் மோடிதான் வெற்றிபெறுவார் என்று தெரிந்து நடைபெறும் தேர்தல் இது. தமிழகத்தில் அரசியல் செய்பவர்களுக்கும் இது தெரியும் என்றார் அண்ணாமலை.

Kokila

Next Post

’இது அம்மா கொடுத்த வாய்ப்பு’..!! ’நான் சாகுர வரைக்கும் அதிமுக தான்’..!! முன்னாள் MLA கருப்பசாமி பரபரப்பு தகவல்..!!

Thu Feb 8 , 2024
நான் பாஜகவில் இணையவில்லை. உயிருள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன் என அவிநாசி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் என 19 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இணைந்ததாக என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் பட்டியலில், அவிநாசியில் […]

You May Like