ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3 பெட்டிகள் கொண்ட தபால் வாக்குகளை ஒவ்வொரு பெட்டியாக சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சியின் ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை என்று கூறி போலீசாருடன் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் நாம் தமிழர் கட்சியின் முகவர்களை அனுமதிக்கவில்லை எனக் கூறி சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார்.
Read More : TCS நிறுவனத்தில் Developer காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!