தர்மபுரி நகராட்சி 8வது வார்டு திமுகவின் கவுன்சிலராக இருந்தவர் புவனேஸ்வரன். இவர் தர்மபுரியில் பழைய ரயில்வே லைன் பகுதியில் இருக்கின்ற கோல்டன் தெருவில் வசித்து வருகிறார் இவருடைய மகள் ஹர்ஷா (23) இவர் தனியார் பார்மசி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கோம்பை வனப்பகுதியில் பாறைகளுக்கு நடுவே அவர் வாயில் துணி வைத்து கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து அதிகமான்கோட்டை காவல்துறையினர் ஹர்ஷாவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது தேன்கனிக்கோட்டை வாலிபர் மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்டோருடன் அதிக நேரம் உரையாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில், 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்திய போது ஹர்ஷாவை அவர்தான் கொலை செய்தார் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த 17 வயது சிறுவன் காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தர்மபுரி காந்தி நகர் பகுதியில் சேர்ந்த அந்த 17 வயது சிறுவன் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்திருக்கிறார். அப்போது ஹர்ஷாவுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஹர்ஷாவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்னர் ஓசூரில் வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு வாலிபர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அந்த சிறுவன் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து கோம்பை வனப்பகுதி பாறை பகுதிக்கு ஒரு முறை மட்டும் வந்து செல் என்று அழைத்துள்ளார். அங்கு வந்த ஆஷாவுக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவன் ஹர்ஷாவின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து பாறை இடுக்கில் அவருடைய சடலத்தை போட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.