தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் ஏற்கனவே தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் ராஜேஷ் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வையாளராக தற்காலிகமாக பணி புரிந்து வருகிறார்.
இத்தகைய நிலையில், நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் ராஜேஷ் அமர்ந்து கொண்டிருந்தார் அப்போது பின்னால் 2 பேர் ராஜேஷ் சரமாரியாக வெட்டியுள்ளனர் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவி இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தி(22), மாரி(19) உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.