fbpx

MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி..!! சிகிச்சை பலனின்றி இன்று மரணம்..!!

மதுரையில் எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி வீட்டின் முன்பு நேற்று தீக்குளித்த நிர்வாகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நேற்று காலை கணேசன் என்பவர் எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி வீட்டின் முன் தீக்குளித்தார். இதையடுத்து, படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடலில் 90% மேல் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். முன்னதாக, மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான தளபதியின் வீடு, மூலக்கரையில் உள்ள நிலையில், அங்கே வந்த திமுக பிரமுகர் கணேசன் திடீரென தற்கொலைக்கு முயன்றார்.

எம்.எல்.ஏ தளபதி வீட்டு வாசலில் நின்றபடி, திடீரென கணேசன் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, கணேசனை காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் அவரது உடல் முழுவதும் தீக்காயம் பரவியது. இதையடுத்து, கணேசன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

Read More : ‘இனி ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே’..!! ‘இதை மறந்துறாதீங்க’..!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!!

English Summary

In Madurai, MLA and DMK District Secretary Thalapathy, the executive who set himself on fire yesterday died today without treatment.

Chella

Next Post

TN Special Bus | வீக் எண்ட்.. சென்னையில் இருந்து கிளம்பும் சிறப்பு பேருந்துகள்..!! பயணிகளே ரெடியா?

Fri Aug 30 , 2024
Special buses will be run from Chennai Kilambakkam bus station to south districts and from other places to Kilambakkam bus station.

You May Like