fbpx

’தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மூடி வரும் திமுக அரசு’..!! ’இது லிஸ்ட்லயே இல்லையே’..!! அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் `என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது, ”தமிழ்நாட்டில் இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. வேலைக்கு ஏற்ற ஊதியமும் இல்லை. தண்ணீரின்றி விவசாயம் பொய்த்துப்போனது. நீராதாரத்தைப் பெருக்க திமுக அரசு முயற்சிக்கவில்லை. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் அடாவடியை அகற்றுவதே இந்த யாத்திரையின் நோக்கம்.

தமிழ்நாட்டில் தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லாமல் உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துகிறது. அரசுப் பள்ளிகளில் 11,000 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த கல்வியை பிரதமர் மோடி கொடுக்கிறார்.

நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நவோதயா பள்ளி கூட இல்லை. நவோதயா பள்ளி வரவிடாமல் திமுக அரசு தடுக்கிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில், மத்திய அரசின் ஏகலைவா பள்ளியைத் தொடங்க அனுமதிக்கவில்லை. இதேபோல, பிஎம்சி திட்டத்தின் கீழ் பள்ளியை தொடங்கவும் அனுமதிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

Chella

Next Post

என் ஆடை பற்றி பேசி தொல்லை கொடுக்கிறார்கள்!… செஸ் வீராங்கனை வேதனை!

Wed Jan 31 , 2024
பார்வையாளர்கள் விளையாட்டை ரசிக்காமல், பாலின பாகுபாட்டை காட்டும் கருத்துகளை கூறி தொல்லை கொடுத்ததாக இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் இளம் செஸ் வீராங்கனையாக இருப்பவர் திவ்யா தேஷ்முக். 18 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான இவர், கடந்த ஆண்டு ஆசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்நிலையில் தான் சமீபத்தில் இவர் நெதர்லாந்து நாட்டின் […]

You May Like