fbpx

’பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளும் திமுக அரசு’..!! ’வேளாண் பட்ஜெட் வெறும் காகிதக் குவியலே’..!! அண்ணாமலை கடும் தாக்கு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்துள்ளது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் உள்ளது. இந்த நாட்களாக, மக்களின் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.

கடந்தாண்டு வேளாண் பட்ஜெட்டில் தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறினார்கள். ஆனால், இந்தாண்டு அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியுள்ளனர். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க 4 ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்தாண்டு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஏன்? தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக? பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா? நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் இந்த அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : மனைவியும் 16, தங்கையும் 16..!! கணவனுக்கு வந்த விபரீத ஆசை..!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

English Summary

The budget for the year 2025-26 was presented in the Tamil Nadu Legislative Assembly yesterday. Following that, Minister M.R.K. Panneerselvam presented the agriculture budget today. In this context, Tamil Nadu BJP leader Annamalai has criticized this agriculture budget.

Chella

Next Post

உலகின் சக்திவாய்ந்த இந்த நாடு ஒரு இந்து தேசமாக மாறும்..! நாஸ்ட்ராடாமஸின் ஆச்சரிய கணிப்பு..

Sat Mar 15 , 2025
Nostradamus predicted that a powerful country in the world would adopt Hinduism.

You May Like