அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே மனதிற்கு ஒரு சந்தோசமான நிகழ்வு தான். அப்படி அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சார்ந்த திமுக எம்.எல்.ஏ. இவர் பாண்டிச்சேரியில் அப்புறம் பணியாளர்களாக இருப்பவர்களுக்கு செய்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பாண்டிச்சேரி மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் சம்பத். இவர்தான் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு தனது செயலின் மூலம் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
பொதுவாகவே தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நட்சத்திர ஹோட்டல்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விமர்சையாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடுவார்கள். அதற்கு ஒரு மாற்றாக தனது பிறந்த நாளை துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடி இருக்கிறார் சம்பத். சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சம்பத் பாண்டிச்சேரியில் துப்புரவு தொழிலாளர்களை அழைத்து அவர்களுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைத்து அவர்களை மகிழ்ச்சி கொள்ள செய்து இருக்கிறார். இந்த விருந்தில் பாண்டிச்சேரி மாநில துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் . இவரது இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பு மக்களிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சம்பத் கொரோனா நோய் தொற்று காலங்களில் அவர்கள் ஆற்றிய தொண்டினை சிறப்பிக்கும் வகையில் அவர்களை அழைத்து விருந்து வைத்ததாக தெரிவித்திருக்கிறார்.