fbpx

“போதை பொருட்களை விற்று தேர்தலை சந்திக்கும் திமுக” – BJP துணைத் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.!

திமுக போதை பொருட்களை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் இராமலிங்கம் முதல் மனுவை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக என்பது மாநில சுய ஆட்சி மற்றும் மாநிலங்களின் உரிமை பேசும் கட்சி அவர்கள் ஏன் அயலக அணி என்ற ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் போதைப் பொருட்களை கடத்தி அதில் வரும் பணத்தை வைத்து திமுக தேர்தலை சந்திக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். கலைஞர் கருணாநிதி பல நாட்களாக கட்சியில் தலைவராக இருக்கும்போது பயலகப்பிரிவு என்ற ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் ஆகியோருக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தான் திமுகவில் இருக்கும்போதே போதைப் பொருள் கடத்தி அதில் வரும் பணத்தை வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக பேச்சு அடிபட்டது. இதனைத் தொடர்ந்து திமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் கேபி. இராமலிங்கம்.

Next Post

"ஸ்டாலின் குடும்பத்திற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் உள்ள தொடர்பு என்ன.." நீதி விசாரணைக்கு EPS கோரிக்கை.!

Sat Mar 9 , 2024
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக குற்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கும் நிலையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு போதை மருந்துகள் கடத்திய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் […]

You May Like