விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழக பட்ஜெட்டில் ’ரூ’ மட்டும் போட்டுவிட்டு உள்ளே ஒன்றும் இல்லை. மீடியாவை வளைக்க பார்க்கிறது திமுக. ஊடகங்கள் கேள்வி கேட்க கூடாது என்று திமுக நினைக்கிறது. அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து, Work From Home அரசியல் இல்லை; உங்களை வீட்டுக்கு அனுப்பப் போகும் அரசியல் இது. நமது எதிரி திமுக, பாஜகவும் தான் என்பதில் தெளிவாக சென்று கொண்டிருக்கிறோம். பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்திருக்கிறது. திமுகவால் செட் செய்த ஆள் தான் அண்ணாமலை. புலியை ஆடு சீண்டுவது போல் அண்ணாமலை எங்களை சீண்டுகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் தவெக-வால் வெல்ல முடியும். இன்னும் 2 மாதங்கள் காத்திருங்கள், உண்மையான போராட்டத்தை விஜய் காட்டுவார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் போராட்டத்தை போல் தவெகவின் போராட்டம் இருக்கும். உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்களை நிற்க வைத்தது திமுகவின் சர்வாதிகாரம். மதிமுக வேட்பாளர் துரை முருகன் சொந்த சின்னத்தில் போட்டியிட திமுக எம்.பி முன்பு கண்ணீர் வடிக்கிறார். திமுகவின் கூட்டணி கட்சிகளின் நிலமை இப்படி தான் இருக்கிறது. தற்போதைய முதலமைச்சரின் ஒரே குறிக்கோள் அவரது மகனை முதல்வராக்குவது தான்.” என்றார்.
Read more: ’அரசியலில் சாதியை உருவாக்கியதே திமுக தான்’..!! தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கடும் தாக்கு..!!