fbpx

கோடையில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்…

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில் கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்..

டீ-காபி அதிகம் குடிக்காதீர்கள் : கோடை காலத்தில் காபி அல்லது டீ ஆகியவற்றை அதிகமாக குடிக்க கூடாது.. ஒரு நாளை 4 அல்லது 5 கப் டீ அல்லது காபி குடிப்பவராக இருந்தால், அதனை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும்.. டீ, காபி குடிப்பது உங்களை புத்துணர்வாக உணர வைப்பதுடன் சோர்வை நீக்கும்.. ஆனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கோடையில் காபி, டீ உட்கொள்வதை தவிர்த்து, சோர்வை நீக்க அல்லது ஆற்றல் நிறைந்ததாக உணர இளநீர், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களை அதிகமாக குடிக்கவும்.

உணவில் மசாலாப் பொருட்களை குறைக்கவும் : கோடையில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதுடன், சில உலர்ந்த மசாலாப் பொருட்களின் பொடியை உணவில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அதிகப்படியான மிளகாய் தூள், கரம் மசாலா, உள்ளிட்ட மசாலாவை அதிகமாக உட்கொள்வது உடலை சூடாக்கும்.. ஏனெனில் அவை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். மேலும், சில மசாலாப் பொருட்களில் கேப்சைசின் என்ற கலவை உள்ளது. இது வெப்பத்தை உருவாக்குகிறது. இது அதிக வியர்வை, தோலில் கொதிப்பு, பலவீனம், நீரிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஊறுகாயை அதிகமாக உட்கொள்ளாதீர்கள் : ஊறுகாயை உணவில் சேர்ப்பது உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது.. ஆனால் சுவை காரணமாக உங்கள் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். ஊறுகாய் அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது.. இதில் நிறைய சோடியம் உள்ளது, இது நீர்ப்பிடிப்பு, வயிற்று உப்புசம், அஜீரணம், வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே ஊறுகாயை மிகக் குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.

தினமும் அசைவம் சாப்பிட வேண்டாம் : கோடை நாட்களில் தினமும் அசைவம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். தந்தூரி, சிக்கன், மீன், கடல் உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும், ஏனெனில் உடல் சூட்டை அதிகரிப்பதுடன், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பல சமயங்களில், இறைச்சி மற்றும் மீன்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு பிரச்சனையும் ஏற்படுகிறது.

அதிகமாக சாஸ் சாப்பிட வேண்டாம் : அதிக சாஸ் அல்லது சீஸ் சாஸ் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இதில் அதிக கலோரி உள்ளடக்கம் உள்ளது. இதை உட்கொள்வதால் வீக்கம் போன்ற உணர்வை தருவதுடன், நாள் முழுவதும் சோம்பலாக உணரலாம். சில சாஸ்களில் அதிக அளவு மோனோசோடியம் குளுட்டமேட் மற்றும் உப்பு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்..

Maha

Next Post

மத்திய அரசு அதிரடி...! நாளிதழ்கள் சட்டத்திற்கு புறம்பான விளம்பரங்களை வெளியிட கூடாது உத்தரவு...!

Sat Apr 8 , 2023
பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப காலமாக வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், […]

You May Like