fbpx

கோடை காலத்தில் இந்த உணவோடு சேர்த்து இதை மட்டும் சாப்பிடாதீங்க..!! பெரும் ஆபத்து..!!

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்து மக்களை சுட்டெரித்து வருகிறது. நம்முடைய உடலை சூடாக்குவதில் டயட் முக்கிய பங்கு வகிப்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். கோடை காலத்தில் பல சுவையான பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைத்தாலும், சூடான வெப்பநிலையில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சில உணவுகள் மற்ற உணவுகளோடு சேரும் போது நமது செரிமான அமைப்பை பாதிக்கின்றன. இதனால் மந்தமாக உணர்வோம். அதுமட்டுமின்றி தவறான சேர்க்கை உணவுகள் வயிறு உப்புசம் மற்றும் பல்வேறு செரிமானப் பிரச்சனைகளை வரவழைக்கும். இந்த கோடை காலத்தில் ஆரோக்கியமான செரிமானத்திற்கும் உடல் நலனுக்கும் கேடு விளைவிக்கும் 5 உணவு சேர்க்கைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மாவுச்சத்து உணவுகளோடு அசிடிக் உணவுகளை சாப்பிடுவது : கோடை காலத்தில் அதிகமாக சாலடுகளை எடுத்துக்கொள்வது சாதாரண விஷயமே. இந்த சாலடின் மேல் கூடுதல் சுவைக்காக வினிகர் அல்லது சிட்ரஸ் பழ ஜூஸ்களை சேர்ப்போம். ஆனால், இந்த அசிடிக் சேர்க்கை மாவுச்சத்து உணவுகளோடு சேரும் போது செரிமானத்தை பாதிக்கிறது.

புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளோடு பழங்கள் சாப்பிடுவது : யோகர்ட் அல்லது சீஸ் போன்ற அதிக புரத உணவுகளோடு பழங்கள் சேர்த்து சாப்பிடுவது செரிமான அழுத்தங்களுக்கு காரணமாக அமையும். பழங்களில் இயற்கையாக சர்க்கரை உள்ளது. இதனால், இவை உடனடியாக செரிமானம் ஆகிவிடும். ஆனால், புரத உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது வயிறு உப்புசம் மற்றும் அசௌகர்யம் ஏற்படுகிறது.

இனிப்பு நிறைந்த பழங்களோடு அசிடிக் பழங்கள் : வாழைப்பழம் போன்ற இனிப்பான பழங்களோடு ஆரஞ்சு, அன்னாசி போன்ற அசிடிக் பழங்களை சாப்பிடுவது செரிமான அசௌகர்யத்தை உண்டாக்கும். கோடை காலத்தில் இந்த பழங்களை ருசித்து உண்ண வேண்டுமென்றால், இதேப்போன்ற அசிடிக் தன்மை நிறைந்த பழங்களோடு சேர்த்து சாப்பிட்டால் எந்தப் பிரச்சனையும் வராது.

சாப்பிடும் போது குளிர்பானம் பருகுவது : கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க குளிர் பானம் பருகுவது நல்லதுதான். ஆனால், சாப்பிடும் போது இடையில் குளிர்பானம் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும். மாற்றாக அறை வெப்பநிலையில் உள்ள அல்லது சூடான பானங்களை பருகலாம்.

பால் பொருட்களோடு தர்பூசணி : கோடை காலம் வந்துவிட்டாலே தர்பூசணியின் வரத்தும் அதிகரித்துவிடும். நீர்ச்சத்து பண்புகள் மற்றும் புத்துணர்ச்சியான சுவை காரணமாக தர்பூசணியை தண்ணீர்ப்பழம் என்றும் கூறுவார்கள். இதை பால் பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்புசம், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

Read More : கர்ப்ப காலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்..?

Chella

Next Post

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Sat May 4 , 2024
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

You May Like