fbpx

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் நிகழுமா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

இன்றளவும், நாம் ஏதாவது உடல் உபாதைகள் என்று மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லும் எளிதான தீர்வு தண்ணீர். நம் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை நீக்குவதற்காக மருத்துவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க சொல்வார்கள். அந்த அளவிற்கு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், செரிமான மண்டலம் மேம்படும். அதோடு பசி நன்றாக எடுக்கும் ஆகவே உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை மற்றும் நுரையீரலில் பிரச்சினையை போன்றவை இருந்தால், நாள்தோறும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. அதேபோல வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஆக்சிஜனை மெது மெதுவாக உள்ளிழுப்பதற்கும் உதவி புரிகிறது. அதேபோல அதிகாலை வேளையில், தண்ணீர் குடிப்பது, உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, உடல் சோர்வை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, நீர் சத்து அதிகரிப்பதால், தலைவலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். குடல்புண் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்கள் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு உடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். தேவையில்லாத கழிவுகள் உடலில் தேங்கி இருப்பதன் காரணமாகத்தான், உடல் எடை அதிகரிக்கும்.

அப்படி உடல் எடை அதிகரித்து இருப்பவர்கள், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், அந்த நச்சுக்கள் வெளியேறி உடல் எடையை குறைக்க வெகுவாக உதவி புரியும் என்று கூறப்படுகிறது. அத்துடன் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கவும், இந்த தண்ணீர் பருகும் பழக்கம் உதவி புரிகிறது. அதோடு, தண்ணீர் உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.

Read More : விஜயலட்சுமி வழக்கில் குற்றம் உறுதியானால் சீமானுக்கு 6 ஆண்டுகள் வரை ஜெயில்..!! முக்கிய ஆதாரம் ரெடியா இருக்காம்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

Drinking water on an empty stomach as soon as you wake up in the morning will improve your digestive system.

Chella

Next Post

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? கவலையே வேண்டாம், இந்த பருப்பை அடிக்கடி சாப்பிடுங்க..

Wed Feb 26 , 2025
health benefits of horsegram

You May Like