fbpx

கடன் பிரச்சனை அதிகமா இருக்கா? இனி கவலை வேண்டாம், ஒரு எலுமிச்சை பழம் மட்டும் போதும்.

பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் அடைக்க முடியவில்லை என புலம்புபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படி நீங்களும் கடன் அடைக்க முடியாமல் கவலை படுகிறீர்களா??? இனி கவலை வேண்டாம். ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள். கட்டாயம் இந்த பரிகாரம் செய்து முடித்த பிறகு கடனை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.

இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில், புதிதாக ஒரு எலுமிச்சை பழத்தை வாங்குங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, இந்த தண்ணீரில் வாங்கி வைத்துள்ள எலுமிச்சை பழத்தை கழுவி விடுங்கள். இப்போ கழுவிய எலும்பிச்சை பழத்தை ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த நேரம் தான் துர்க்கை அம்மனுக்கு உகந்த நேரம்.

இப்போது, ராகு கால நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி, கையில் கழுவி வைத்துள்ள எலுமிச்சை பழத்தை வைத்து எனக்கு கடன் பிரச்சனை அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர், அந்த எலுமிச்சை பழத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கொள்ளவும். இதனை தலையணைக்கு அடியில் வைத்து மூன்று நாட்களுக்கு தூங்குங்கள். மூன்றாவது நாள் தலையணைக்கு வைத்துள்ள எலுமிச்சை பழத்தை, மூன்று முறை தலையை சுற்றி போட வேண்டும். இப்படி செய்து பாருங்கள், கட்டாயம் உங்கள் கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்..

Maha

Next Post

மகிழ்ச்சி...! இந்த ஆண்டு தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் 6 பொருட்கள் வழங்கப்படும்...! என்னென்ன தெரியுமா...?

Thu Oct 12 , 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு 6 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ரேஷன் தொகுப்பில் நான்கு பொருட்களுக்குப் பதிலாக தற்போது ஆறு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 100 ரூபாய் செலுத்தி இதை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பரிசுத் தொகுப்பில் […]

You May Like