fbpx

கரண்ட் பில் கம்மியா வரணுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..

ஃப்ரிட்ஜ் இல்லாத வீடே இல்லை என்று கூறும் அளவிற்கு பிரிட்ஜ் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. அப்படி நாம் வாங்கி வைக்கும் ப்ரிட்ஜ் சுவரில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?? ஆனால் நாம் செய்யும் இந்த சிறு தவறு தான் மின் கட்டணத்தை அதிகரித்து விடுகிறது. அப்படி நீங்கள் மின்சாரக் கட்டணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால் கட்டாயம் இதை செய்து பாருங்கள் நல பலன் தரும்.

ஃப்ரிட்ஜை ஹால், சமையல் அரை என்று எங்கு வேண்டும் ஆனாலும் வைக்கலாம். ஆனால், ஃப்ரிட்ஜ்க்கும் சுவருக்கும் இடையில் இருக்கும் தூரம் தான் முக்கியம். நிபுணர்களின் கூற்றுப்படி, ஃப்ரிட்ஜ்க்கும் சுவருக்கும் இடையில் 6 முதல் 10 அங்குல இடைவெளி இருக்க வேண்டும். உங்கள் ஃப்ரிட்ஜ்க்கும் சுவருக்கு மிக அருகில் இருந்தால் அது அதிக வெப்பமடைந்து செயலிழந்துவிடும். மேலும், கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து, காற்றோட்டத்திற்கு போதுமான இடம் இல்லாவிட்டால் ப்ரிட்ஜ் வேலை செய்யாது.

ஃப்ரிட்ஜில் எப்போதும் அதிகமான பொருட்கள்கொண்டு நிரப்ப வேண்டாம். தேவையில்லாத உணவை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். மேலும், ஃபிரிட்ஜில் இறுக்கமான பிளாஸ்டிக் கவரை வைத்தால் ஃப்ரிட்ஜில் வெப்பம் கூடும். மேலும், ஃப்ரிட்ஜை அடிக்கடி திறப்பதும் அதிக மின் கட்டணத்திற்கு ஒரு காரணம்.

Maha

Next Post

துணிகளில் சாயம் படிந்து விட்டதா?? இதை மட்டும் செய்யுங்கள்..

Sat Oct 14 , 2023
பொதுவாக நாம் தின பயன்பாட்டிற்கு அணியும் ஆடைகளை நாள் முழுவதும் அணிவதால், அதில் கரைகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் ஆடைகள் சீக்கிரம் நிறம் மாறிவிடும். மேலும் நமக்கு பிடித்த ஆடைகள், அல்லது குழந்தைகளின் சீருடைகளில் கரை படிந்து விட்டால் அதை துவைப்பது மிக கடினம். மேலும், துணிகளில் நிறம் மாறி பழைய துணி போல் மாறிவிடும். இதனால் எப்படி துணிகளில் உள்ள விடாப்படியான கரையை, துணியின் […]

You May Like