வாய் துர்நாற்றம் பலருக்கு இருக்கும் பிரச்சனை. என்ன தான் பல் தேய்த்தாலும் பலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கத்தான் செய்யும். இதக்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் தான். மேலும், பற்களில் கிருமி, நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம், சொத்தைப்பல், அல்சர், குடல்புண் போன்ற பல காரணங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். வாய் துர்நாற்றத்தை போக்க என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
- காலையில் பல் துலக்கிய பின்னர் 1/4 தேக்கரண்டி சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் இருக்காது.
- 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சாப்பிடுவதால் வாய் நறுமணமாக இருக்கும்.
- தினமும் உணவு சாப்பிட்ட பின், 1 அல்லது 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறை 1/4 கிளாஸ் தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்தால், வாயில் உள்ள உணவு துகள்கள், கிருமிகள் நீங்கிவிடும். இதனால் வாய் சுத்தமாகி துர்நாற்றம் வீசாது.
- பட்டை, இலவங்கம் ஆகியவை அவ்வப்போது மென்று சாபிட்டால் வாய் துர்நாற்றம் இருக்காது.
- அல்சர், வயிற்றுப்புண், செரிமான பாதிப்பினாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதனால் நாம் வயிறையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் காலை உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு பின் பல் துலக்கிய பின்னர் உப்பு கலந்த நீர் கொண்டு வாயை கொப்பளிக்கவும்.
- அவ்வப்போது 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.