ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவ்வளவு எளிதாக அவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ரயிலில் அனைத்து வசதிகளும் இருப்பதால், பெரும்பாலான மக்கள், ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட நாளில் தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு பயணிக்கின்றனர்.
இதற்கிடையே, ரயில்கள் ரத்து செய்யப்படும் போது அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும் போது, அதுபற்றி எஸ்எம்எஸ்களை பயணிகளுக்கு ரயில்வே அனுப்பி வைக்கிறது. ஆனால், இந்த தகவல்களை ரயில் பயணிகள் சரியாக கவனிப்பதில்லை. பயணிகள் தங்கள் பயணங்களுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே ரயில்கள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணிகள் அமரும் இடத்தின் தன்மைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அட்வான்ஸ் ரிசர்வேஷன் காலம் முன்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவுகளில் ஏற்படும் மாற்றங்களை பயணிகள் அவ்வப்போது கவனித்து கொள்ள வேண்டும். தங்கள் இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகள் தங்கள் பெர்த் (இருக்கை) எண்களில் மாற்றங்கள் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 4 மணிநேரம் முன்னதாகவே அவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும.
ரயில் புறப்படுவதற்கு முன்பே அந்த ரயில் குறித்த எஸ்எம்எஸ் விவரங்கள் பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பயணிகள் தங்களுடைய ரயில் பயணத்தில் இருக்கை மாற்றங்கள், வழக்கமான ரேக்குகளை எல்ஹெச்பி ரேக்குகளாக மாற்றுதல், ரயில் சேவைகளில் மாற்றங்களை கவனிப்பது அவசியம். இறுதி அட்டவணை தயாரான பிறகு இருக்கை விவரங்களைச் சரிபார்க்க www.irctc.co.in அல்லது www.indianrail.gov.in
அல்லது ஹெல்ப்லைன் 139ஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : சாக்ஸ் அணியாமல் ஷூ போடும் பழக்கம் உடையவரா நீங்கள்..? அப்படினா கட்டாயம் இதை படிங்க..!!