fbpx

நன்றாக உறங்கியும் காலையில் சோர்வாக உணர்கிறீர்களா.? அதுக்கு இதுதான் காரணம்.!

இரவு நன்றாக உறங்காமல் இருந்து காலையில் சோர்வாக உணர்ந்தால் அது இயல்பான ஒன்றுதான். ஆனால் இரவில் நன்றாக உறங்கிய பின்பும் காலையில் சோர்வாக உணர்வது மற்றும் வேலையில் ஆற்றல் குறைவது போன்ற பிரச்சனைகள் பலருக்கு இருக்கும். இது எதனால் ஏற்படுகிறது இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

இது தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி இரவில் நன்றாக உறங்கினாலும் உடலில் இருக்கும் நீர்ச்சத்தில் குறைவு ஏற்படும் போது உடல் மிகவும் சோர்வாக உணரும். மேலும் காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தாலும் நமக்கு சோர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு காலை எழுந்தவுடன் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் காலையில் முதல் உணவாக அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்காக காலையில் தினமும் முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் இவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. மேலும் நார்ச்சத்துக்கள் அடுத்தடுத்து உணவுகள் உண்பதையும் தடுக்கிறது.

இந்த முழு தானிய உணவுகளுடன் முட்டை, தயிர் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றையும் கலந்து சாப்பிடலாம். காலையில் நாம் உண்ணும் முதல் உணவு என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதுதான் நமது உடலின் ஒரு நாள் இயக்கத்திற்கு தேவையான முதல் சக்தியை வழங்குகிறது. எனவே காலையில் தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

Kathir

Next Post

வீட்டில் கூரையை பிச்சுட்டு பணம் கொட்டனுமா.? இந்த செடிகளை வளர்த்துப் பாருங்கள்.!

Sat Nov 18 , 2023
வாஸ்து சாஸ்திரம் என்பது சாஸ்திரத்தில் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் ஒருவரின் வீடு அமைப்பு மற்றும் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டே அவரது நேர்மறை சிந்தனை மற்றும் செல்வ வளம் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டுவர முடியும். நமது வீட்டில் அமைதி நிலவ நேர்மறை சிந்தனைகள் பெருக மற்றும் செல்வ வளம் கொழிக்க பின்வரும் செடிகளை வளர்க்கலாம். அந்தச் செடிகளினால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவற்றை வளர்க்கும் முறை பற்றி […]

You May Like