பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஒரு தொகையாகும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதன்படி, 12 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎஃப் கணக்கு தொடர்ந்து இருக்கும்.
நிறுவனங்களில் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பில் EPFO கணக்கு தொடங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் EPFO-வில் புதிதாக இணைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தொழில் உற்பத்தி துறையில் முதன்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் முதல் சந்தாவை அரசே செலுத்திவிடும். அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ரூ.3,000 ஆயிரம் அரசு செலுத்தும்.
EPFO-வில் பதிவு செய்து முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை 3 தவணைகளில் மத்திய அரசு அவர்களின் கணக்கில் செலுத்தும். அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதம் ஒரு லட்சம் சம்பளமாக இருக்கும். அதன்படி, பிப்ரவரி மாதத்தில் இணைந்த 15 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.3000இல் இருந்து செலுத்தப்படும். இது அவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செல்லாமல் பிஎஃப் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கலாம்
இப்போது EPFO 3.0 திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிஎஃப் பணம் எடுப்பது கடினமாக இருப்பதால், இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, இனி வங்கி ஏடிஎம் போலவே, பிஎஃப் சந்தாரர்களுக்கும் ஏடிஎம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.