fbpx

உங்களுக்கு தபால் அலுவலகத்தில் கணக்கு இருக்கா..? அப்ப இந்த புதிய விதிகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

மத்திய அரசு சார்பில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது… மக்களுக்கு உதவும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் கிடைக்கின்றனர்.. வங்கிகளை போன்றே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் திறப்ப பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. உங்கள் கணக்கும் தபால் அலுவலகத்தில் இருந்தால், இந்த விதிகளை நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.

தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஒரு வாடிக்கையாளர் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால், அவர்களுக்கு சிறப்பு சரிபார்ப்பு தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 10,000க்கு மேல் திரும்பப் பெறும் தொகையை சரிபார்ப்பது அவசியம் என்று அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இது தவிர, சில நிபந்தனைகளின் கீழ் அஞ்சல் அலுவலகம் மூலம் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கலாம். தபால் நிலையத்தில் வங்கி மோசடிகளை தடுக்கவே இதுபோன்ற விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் மோசடி வழக்குகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வங்கி தொடர்பான மோசடிகளைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட விதிகள் மட்டுமின்றி, பணம் எடுக்கும் வரம்பையும் தபால் துறை உயர்த்தியுள்ளது. முன்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.5000 வரை மட்டுமே எடுக்க முடியும், தற்போது ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கிலும் 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது.. .

யார் வேண்டுமானாலும் தபால் அலுவலகத்தில் கணக்கு திறக்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் மட்டுமே. தற்போது, ​​தபால் நிலைய சேமிப்பு கணக்கில் 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

40 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அங்கீகாரம்.. கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ரேவதி...

Mon Sep 26 , 2022
மலையாளத் திரையுலகில் பெரும் பங்களிப்பை வழங்கிய நடிகை ரேவதி, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கேரள மாநிலத்தால் கௌரவிக்கப்பட்டார். பிரபல நடிகை ரேவதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.. ஆரம்பக்கட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர படங்களில் நடித்து வருகிறார்.. 3 வெவ்வேறு பிரிவுகளில் 3 தேசிய […]

You May Like