வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க ரோபோக்களை பயன்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் குறிப்பிட்ட கிளைகளில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு என சேவை வழங்க வேண்டும் என கேட்டறிய உள்ளன.
இந்த தகவலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தலைமை செயல் அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவத்சவா தெரிவித்திருக்கிறார்.மறு சீரமைப்பு நடவடிக்கையாக அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தங்கள் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ரோபோக்களை அறிமுக செய்ய உள்ளதாக அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் வகையில், ரோபோக்களை வடிவமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக வங்கி கணக்கு தொடங்குவது, வாடிக்கையாளர்கள் லாக்கரை திறக்க உதவுவது போன்ற பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More : ஒரே நாள் தான்..!! மொத்தமும் போச்சு..!! ரூ.6 லட்சம் கோடியாம்..!! கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை..!!