fbpx

Cancer | உங்களுக்கு புற்றுநோய் இருக்கா..? உங்கள் நகங்களை வைத்தே கண்டுபிடிக்கலாம்..!!

Cancer | உலகில் எண்ணற்ற மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் தான் என்று சொல்லப்படுகிறது. என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த இரண்டு நோய்களால் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். இதற்கு காரணம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதுமான சிகிச்சையை எடுக்காமல் இருப்பது தான். தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் சில கொடிய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும் இந்த அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், பலர் அதைப் புறக்கணிக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவரான Dr Lindsey Zubritsky மிகவும் அரிதான ஆனால் கொடிய தோல் புற்றுநோய் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், தோல் புற்றுநோயின் மிகவும் அரிதான மற்றும் நிறைய பேர் புறக்கணிக்கும் அறிகுறி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது விரல் நகங்களில் கருமையான கோடு தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒரு வகையான சரும புற்றுநோயான சப்யூங்குவல் மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார். இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே அதை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Read More : BB Archana | காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..!! திருமணம் எப்போது..? வைரல் புகைப்படம்..!!

Chella

Next Post

விமானம் மோதி கொத்து கொத்தாக செத்து விழுந்த பிளமிங்கோ பறவைகள்! - தரையிறங்கும் போது நடந்த துயரம்!

Tue May 21 , 2024
மும்பையின் காட்கோபரில் உள்ள பந்த்நகரின் லக்ஷ்மி நகர் பகுதியில் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மோதியதில் சுமார் 40 ‘பிளமிங்கோ’ பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எமிரேட்ஸ் விமானம் ஃபிளமிங்கோ பறவைக் கூட்டத்தின் ஊடாக பறந்து சென்றதால், 40 பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன. விமான விபத்தில் பிளமிங்கோ பறவைகள் சிக்குவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஃபிளமிங்கோ பறவைகளின் […]

You May Like