fbpx

உங்களிடம் பான் கார்டு இருக்கா..? இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!

பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். இந்த கார்டு வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவை என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிக வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம், இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயம். ஒரு நபரால் பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு அவசியம்?

நாம் செய்யும் பல முக்கியமான விஷயங்களுக்கு பான் கார்டு வைத்திருக்க வேண்டும். ஒருவர் வங்கிக் கணக்கை தொடங்க பான் கார்டு தேவை. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு அவசியம். அந்த டிமேட் கணக்கை பான் கார்டு இல்லாமல் திறக்க முடியாது. 50,000 ரூபாய்க்கும் மேல் பணத்தை அனுப்புவதற்கு பான் கார்டு அவசியம். இது தவிர, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கும் பான் கார்டு அவசியம்.

முக்கியமாக, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்ட் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டை பயன்படுத்த முடியாது. அந்த ஒரு பான் கார்டைத்தான் பணப்பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்த முடியும்.

Read More : ’சவுக்கு சங்கர் நிலைமை தான் என் கணவருக்கும்’..!! ’2 நாட்களாக எந்த தகவலும் இல்லை’..!! பெலிக்ஸ் மனைவி பரபரப்பு பேட்டி..!!

Chella

Next Post

உள்ளே போனா வெளியே வர முடியாது.... பிக்.. பிக்.. பிக்பாஸ் போல….

Mon May 13 , 2024
நடிகர் ரஜினியின் பண்ணை வீட்டில் உள்ளே போனா வெளியே வர முடியாதாம் அது குறித்து தற்போது பார்க்கலாம்… திரைத்துறையை சார்ந்த பல நடிகர், நடிகைகள் தங்களுக்கு என பண்ணை வீடு வைத்துள்ளனர். அந்த வகையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்  ரஜினி. அவருடைய பண்ணை வீடு கேளம்பாக்கத்தில் உள்ளது. இவர், தற்போது, 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், […]

You May Like