யாருக்கெல்லாம் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம்..?

புற்றுநோய் ஒரு தீவிரமான நோயாகும்.. இந்த நோய் கண்டறியப்பட்ட உடனே, முழுமையான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். இந்த நோய் முக்கியமாக இரண்டு வழிகளில் ஏற்படலாம். முதல் காரணம்- மரபணு.. மரபணு காரணமாக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.. மற்றொரு காரணம் – வாழ்க்கை முறை. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் ஆகியவை காரணமாக புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் பாதிப்பு அதிகரிக்கிறது..

புற்றுநோயின் அறிகுறிகள்

  • சோர்வு
  • இருமல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
  • சிறுநீர் பிரச்சினைகள்
  • தோல் நிறத்தில் மாற்றம்
  • இரவு வியர்வை
  • தசை வலி
  • உணவை விழுங்குவதில் சிரமம்

யாருக்கெல்லாம் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் : தற்போதையை பிசியான வாழ்க்கைக்கு மத்தியில், உடல் செயல்பாடுகள் மிகவும் குறைவும்.. இதனால் உடலில் பல நோய்கள் வர ஆரம்பிக்கின்றன. நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் முழுவதும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்..

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மது அருந்துபவர்கள் விரைவில் இந்த ஆபத்தான நோய்க்கு இரையாவார்கள். மறுபுறம், புகைபிடிக்கும் நுகர்வுடன் மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே போதையில் இருந்து விலகி இருங்கள். பாதுகாப்பற்ற உடலுறவு புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. கூடுதலாக, எய்ட்ஸ் அபாயமும் அதிகம். இவர்கள் தவிர, வயதானவர்கள், குடும்ப வரலாறு, உடல் பருமன் போன்ற காரணங்களாலும் புற்றுநோய் ஏற்படுகிறது..

Maha

Next Post

இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர்...! மொத்தம் 18 அமர்வு... 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும்...!

Mon Jul 18 , 2022
இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இரு அவைகளின் அனைத்துக் கட்சி தலைவர்களுடனான அரசின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று கூறினார். இந்த கூட்டத்தொடர்  […]

You May Like