கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2 பிரபலமான ஆப்ஸ்களை டெலீட் செய்துள்ளது. இந்த 2 ஆப்ஸ்களை சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துள்ளனர். இது ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் தீவிரம் அதிமாக இருப்பதினால் உடனே இவற்றை டெலீட் செய்யவும் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பின்வரும் 2 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் ஆவது உங்கள் போனில் இருந்தால், உடனே கீழே வரும் செயல்முறைகளை தவறாமல் செய்துவிடுங்கள். இல்லையெனில், உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைந்து இருக்கும் தகவல்கள் அணைத்தும் திருடப்படலாம்.
பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் Google Play இல் இரண்டு தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்துள்ளனர். இந்த ஆப்ஸை இதுவைரை சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இன்ஸ்டால் செய்துள்ளனர் என்ற எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. BleepingComputer இன் அறிக்கையின்படி, இந்த ஆப்ஸ்கள் பயனரின் கவனமின்றி, அவர்களின் தரவை சேகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட 2 ஆப்ஸ்களில் முதல் ஆப்ஸ், “பைல் ரெக்கவரி (File Recovery)” எனக் குறிப்பிடப்பட்டு, சாதனங்களில் “com.spot.music.filedate” என லேபிளிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1 மில்லியன் பயனர்களை இந்த ஆப்ஸ் கொண்டுள்ளது.
“com.file.box.master.gkd” என அடையாளம் காணப்பட்ட இரண்டாவது பயன்பாடான “பைல் மேனேஜர் (File Manage)” குறைந்தபட்சம் 500,000 நிறுவல்களைக் கொண்டுள்ளது.
உங்கள் போனின் ஸ்டோரேஜ் தகவல், போனுடன் இணைக்கப்பட்ட மெயில் மற்றும் சமூக பக்கங்களுடன் தொடர்புடைய காண்டாக்ட் பட்டியல், போனில் உள்ள போட்டோஸ், ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் எல்லாம் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பயனரின் லைவ் லொகேஷன், மொபைல் நம்பர், நெட்வொர்க் வழங்குநரின் பெயர் மற்றும் சிம் வழங்குநர் நெட்வொர்க் கோட், OS விபரம், உங்கள் ஸ்மார்ட்போனின் பிராண்ட் மற்றும் மாடல் விபரம், மொபைல் டேட்டாவிபரம் போன்ற தகவல்களை இந்த ஆப்ஸ் பயனரின் அனுமதி இன்றி திருடியதாக தெரிகிறது. இது தவிர, இந்த ஆப்ஸ் முகப்புத் திரை ஐகான்களை மறைத்தும் மோசடி செய்துள்ளது.
உங்கள் போனில் இந்த 2 ஆப்ஸ்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து பாருங்கள். ஒருவேளை உங்கள் போனிலும் இந்த ஆப்ஸ் இருக்கிறதென்றால், உடனே அவற்றை டெலீட் செய்திடுங்கள். உங்கள் போனை அப்டேட் செய்து, ஆன்டி வைரஸ் போன்ற சாப்டவேர் உடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.