நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூ.5,000 கிடைக்கும். மேலும், உங்களின் மகளுக்கு 18 வயதாகும் போது, அரசானது ரூ.75,000 வரை தருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மகள்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அம்மாநில அரசு துவங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் மகளுக்கு ரூ.75,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. அம்மாநில அரசு 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் லேகி லட்கி திட்டத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது. இதில் பெண் குழந்தை பிறந்த 18 ஆண்டுகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பெண் குழந்தை பிறந்தால் ரூ.5,000 வழங்கப்படும். அதன்பின் உங்களது மகள் முதல் வகுப்பில் பயிலும் போது, அவர்களுக்கு ரூ.4.000 கிடைக்கும். உங்கள் மகள் 6ஆம் வகுப்பு பயிலும் போது ரூ.6,000 கிடைக்கும். 11ஆம் வகுப்பில் ரூ.8,000 கிடைக்கும். 18 வயது அடந்தபின் மகாராஷ்டிர அரசிடமிருந்து ரூ.75 ஆயிரம் கிடைக்கும். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் அட்டை வைத்திருப்போர் மட்டுமே மகாராஷ்டிரா அரசின் இத்திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.