fbpx

நவராத்திரிக்கு வீட்டில் கொலு வைக்கிறீங்களா..? எதை எப்படி வைத்தால் நன்மை கிடைக்கும்..?

நவராத்திரியின் 9 நாட்களும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். இந்த 9 நாட்களும் யார் வீட்டில் ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும்.

இந்தாண்டு நவராத்திரி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. நவராத்திரி வழிபாடுகளில் கொலுவும் ஒன்று. இந்த ஒன்பது நாளிலும் யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும், அந்த கொலுவைப் பார்த்து ரசிப்பதும் வேண்டிக்கொள்வதும் மகத்தான பலன்களைத் தரும் என்பது ஐதீகம்..!

கொலு எப்படி வைக்க வேண்டும்?

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டே 9 படிகள் வைத்து, அதில் பொம்மைகளை அடுக்கி வைப்பது. அவரவர் வசதிக்கேற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.

முதல் படியில் மரம், செடி, கொடி ஆகிய ஓரறிவு உயிரினங்கள், இரண்டாவது படியில், நத்தை, சங்கு போன்ற ஈரறிவு உயிரினங்களை வைக்கலாம். எறும்பு, கரையான், சிறு பூச்சிகள், மண் புழு போன்ற மூன்றறிவு உயிரினங்களை மூன்றாம் படியிலும், வண்டு, நண்டு, பட்டாம்பூச்சி உள்ளிட்ட 4 அறிவு உயிரினங்களை நான்காம் படியிலும் வைக்க வேண்டும். ஐந்தாம் படியில் ஐந்தறிவு உயிரினங்களான பறவைகள், விலங்குகள் பொம்மைகளை வைக்கலாம்.

ஆறாம் படி தான் மனிதர்களுக்கானது. இதில், திருமணங்கள் போன்ற சடங்குகள், வியாபாரம், நடனம் ஆடும் பொம்மைகள், தலைவர்களின் பொம்மைகளை வைக்கலாம். ஏழாம் படியில் மனித நிலையில் இருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரை வைக்க வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம். எட்டாம் படியில், தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தேவியருடன் அமர்ந்திருக்கும் சிலைகளை வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும். இங்கே பூரண கும்பத்தை வைத்து நிறைவு செய்யலாம். மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவாகத் தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே, இவ்வாறு கொலு வைக்கப்படுகிறது.

முக்கியமாக, நவராத்திரியின் 9 நாட்களும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கினால் உறவுகளுக்குள்ளும் அக்கம்பக்கத்திலும் நல்ல இணக்கம் ஏற்படும். அன்பு மேம்படும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

Chella

Next Post

’அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சா’..? ’விடியா முதல்வரே’..!! மு.க.ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி..!!

Thu Oct 5 , 2023
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், கடந்த 2021இல் சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட 311-வது மற்றும் 181ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், […]

You May Like