fbpx

ரயில்வே காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வெறும் 35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் எடுக்கும் பயணக் காப்பீடு எடுத்திருந்தால் அதன் மூலமும் பலன் இழப்பீடு பெறலாம்.

ரயில்வே பயணக் காப்பீட்டு எடுக்க பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தினால் போதும். இந்த வசதியின் மூலம், ஐஆர்சிடிசி (IRCTC) ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீட்டின் கீழ், பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின்போது மதிப்புமிக்க பொருட்களை இழந்தால், அதற்கு இழப்பீடு பெற முடியும். மேலும், விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகளை ரயில்வே நிர்வாகம் ஏற்கும். இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டாளரின் நாமினிக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.

ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமுற்றாலோ, ரூ.10 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், அவருக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். பலத்த காயம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், சிறிய காயம் ஏற்பட்டால், ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிகேஷன் மூலம் இந்தக் காப்பீட்டைப் எடுப்பது எளிது. ஆனால், இந்த இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயம் அல்ல. பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, டிராவல் இன்சூரன்ஸ் வேண்டுமா என்று கேட்கப்படும் இடத்தில் ஆம் என்று தெரிவித்தால் போதும். இதன் மூலம் ரயில் டிக்கெட் கட்டணத்துடன் 35 பைசா மட்டும் பயண காப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்படும்.

இந்திய ரயில்வே பயணிகள் ரயில் விபத்தில் சிக்கிய 4 மாதங்களுக்குள் காப்பீடு கோரலாம். பயணிகள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது பயணிகள் நாமினியின் பெயரை நிரப்ப வேண்டும். அவ்வாறான நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதைக் கோருவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

Read More : ’கருப்பா இருந்தாலும் சிறுமியின் மீது கணவருக்கு ஆசை’..!! உடல் முழுவதும் அயர்ன் பாக்ஸ், சிகரெட் சூடு..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

English Summary

If the passenger has taken travel insurance while booking the ticket with IRCTC, the benefit can also be compensated.

Chella

Next Post

மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு... இணைப்பு வழங்குவதில் தாமதம்..!! - TANGEDCO போட்ட அதிரடி உத்தரவு

Mon Nov 4 , 2024
Due to the shortage of EB meters there has been a delay in the provision of new electricity connections.

You May Like