fbpx

Google Map-இல் இருக்கும் இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவ்வளவு பயனுள்ளதா..?

ஒரு காலத்தில் முகவரி தெரியாவிட்டால், பக்கத்து ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. தொழில்நுட்பத்தின் வருகையால் அனைத்தும் மிக எளிதாகிவிட்டன. Google Mapsன் வருகையால், யாரும் கேட்காமலே முகவரியை அறிந்துகொள்கின்றனர். உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், இந்த முகவரிகளை ஒரு சிறிய கிளிக்கில் கண்டுபிடிக்கும் காலம் வந்துவிட்டது.

ஆனால், நாம் பயன்படுத்தும் கூகுள் மேப்பில் நமக்குத் தெரியாத சில ரகசிய அம்சங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா..? அவற்றின் பயன்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

* கூகுள் மேப்பில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று Street View Time Travel அம்சமாகும். இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் முன்பு எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.

* அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்த இடம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை பார்த்துக் கொள்ளலாம். தேதியை தேர்ந்தெடுத்தால் போதும். ஆனால், இந்த விருப்பம் சில இடங்களில் மட்டுமே உள்ளது.

* வரைபடத்தில் கிடைக்கும் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் Offline Navigation. இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் இணையம் இல்லாமல் வரைபடங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், இதற்காக நீங்கள் முதலில் வரைபடத்தில் அந்த இடத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களுக்கு செல்லும் முன் அந்த இடத்தை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

* வரைபடத்தில் உள்ள மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பானது. Gemini AI அம்சத்தின் உதவியுடன் நீங்கள் பயணம் செய்யும் போது செல்லலாம். இந்த navigation-ஐ voice command உதவியுடன் செய்ய முடியும்.

* Google Maps-ல் Electric vehicle setting வழங்கப்பட்டுள்ளது. இது மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. இந்த அம்சத்தின் மூலம் கூகுள் மேப்ஸில் EV நிலையங்கள் எங்கு உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

* Google Maps-ல் உள்ள இந்த அம்சத்தின் உதவியுடன் ஒருவர் எந்த ஹோட்டலிலும் இரவு உணவு மேசையை முன்பதிவு செய்யலாம். இதற்கு கூகுள் மேப்பில் சென்று hotel near என தேட வேண்டும். இதில், உங்களுக்கு அருகில் உள்ள உணவகங்களின் பட்டியலைக் காண்பீர்கள்.

Read More : வெறும் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3,56,000 லாபம் பார்க்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!

Chella

Next Post

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..!! ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு..!! மீண்டும் எப்போது..? சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Wed May 15 , 2024
Senthil Balaji | சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் […]

You May Like