வெறும் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3,56,000 லாபம் பார்க்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!

தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்புத் திட்டத்தை பற்றி இந்தப் பார்க்கலாம்.

தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம். முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். இத்திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.

இந்த திட்டத்தில் மாதம் தோறும் ரூ.5,000 முதல் ரூ.20,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகையை பற்றி பார்க்கலாம். Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் மாதத்தின் 1 முதல் 15ஆம் தேதிக்குள் கணக்கை திறந்தால் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

இதுவே நீங்கள் 15ஆம் தேதிக்கு பிறகு கணக்கை தொடங்கினால், மாதத்தின் கடைசி வேலை நாளில் பணத்தை Deposit செய்ய வேண்டும். நீங்கள் பணத்தை சரியாக டெபாசிட் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு டெபாசிட் செய்யாமல் இருந்தால் கணக்கு மூடப்படும். அவ்வாறு மூடப்பட்டால் இரண்டு மாதங்கள் கழித்தே Activate செய்ய முடியும். இந்த திட்டத்தில் கணக்கை திறக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் முடிந்த பிறகு முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம்.

ரூ.5,000 முதலீடு

* Post Office Recurring Deposit திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ.3,56,829 கிடைக்கும்.

  • * மாதந்தோறும் ரூ.12,000 முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ.8,56,390 கிடைக்கும். மாதந்தோறும் ரூ.20,000 முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் முதிர்வு தொகையாக ரூ.14,27,317 கிடைக்கும்.

Read More : பத்திரப்பதிவு முடிந்த உடனேயே நீங்கள் நிலத்தின் உரிமையாளராக முடியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

இனி 'Google Search' ரொம்ப ஈசி.. தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை!

Wed May 15 , 2024
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களின் கேள்விக்கு விரைவாக பதில் அளிக்கும் விதமாக, AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்-இல் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் விரைவில் பயனர்கள் தேடும் கேள்வியின் விவரங்களைக் கொடுப்பதை கூகுள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அது என்ன தொழில்நுட்பம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். இந்த புதிய […]

You May Like