வங்கிக் கணக்குகளை காட்டிலும், தபால் அலுவலக திட்டங்களில் கூடுதல் லாபம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அஞ்சலகத் திட்டத்தின் கீழ் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே எதிர்கால தேவைக்காக முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
அந்த வகையில், தபால் அலுவலகத்தில் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 10 வயது பூர்த்தி அடைந்த ஆண் குழந்தையின் பெயரிலேயே பெற்றோர்கள் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.ஆனால், 10 வயதுக்கு முன்பாகவே கணக்கு துவங்க விரும்பினால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கு துவங்கி 10 வயது நிறைவடைந்ததும் குழந்தையின் பெயரிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 8.5% வட்டி வழங்கப்படுவதால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ. 500 முதலீடு செய்தாலே அதிக லாபம் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து கொள்ள இயலும். மேலும், கணக்கு துவங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்த தொகையும் வழங்கப்படும்.