fbpx

ஷாலினி தனியாக சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? அடேங்கப்பா இவ்வளவா..?

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் ஷாலினி. இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதோடு தற்பொழுது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி விட்டார். சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் ஷாலினி தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினியின் சொத்து சொந்தமாகவே ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

இவ்வளவு தொகையா...? தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1760 கோடி பறிமுதல்...!

Tue Nov 21 , 2023
மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படும் பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்வது இந்திய தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் அதிகரித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.1760 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2018-ம் ஆண்டில் இந்த மாநிலங்களில் நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றப்பட்டதை விட 7 மடங்கு (ரூ.239.15 கோடி) அதிகமாகும். குஜராத், ஹிமாச்சல […]

You May Like