fbpx

அள்ளிக் கொடுத்த வள்ளலின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா..? வெளிவந்த தகவல்..!!

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் விஜயகாந்த். இருந்தபோதிலும் அவரது தேமுதிக கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு நல்ல உடல்நிலையில் இருந்தபோது செய்த பணிகள் காரணமாக அமைந்துள்ளன.

அரசியலிலும் திறம்பட செயல்பட்ட விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை அவர் காலமானார்.

விஜயகாந்த் பலருக்கும் அள்ளிக்கொடுத்த கர்ணன் ஆவார். அதே போல் இவரைபோல் சாப்பாடு போட்டு வயிறையும், மனசையும் யாராலும் நிரப்பவே முடியாது என்றும் கூறுவார்கள். இப்படி பலருக்கும் அள்ளிக்கொடுத்த நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 53 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஜயகாந்தின் வீட்டின் விலை மட்டும் ரூ. 1 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இவரது மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம், கேப்டன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் வாயிலாக உள்ளது. விஜயகாந்த் தன்னுடைய எதிர்காலத் தேவைக்காகத் தபால் நிலைய திட்டங்கள், NSS போன்ற அரசு முதலீட்டு திட்டத்தின் வாயிலாகச் சுமார் 2 கோடி ரூபாய் முதலீடு செய்து சேமித்து வைத்துள்ளார். விஜயகாந்த் பெரிய வாகன பிரியர் என்றால் மிகையில்லை.

விஜயகாந்த் தான் நடித்த படத்திலும் பெரிய பெரிய கார்களைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அவரிடம் பென்ஸ், ஆடி, போர்டு எண்டேவர், ஹோண்டா கார், வால்வோ, ராயல் என்ஃபீல்ட் பைக், 2 டெம்போ டிராவலர் ஆகியவை உள்ளது. மேலும் விஜயகாந்த் 2016 தேர்தலில் போட்டியிடும் போது இவரது குடும்பத்தில் 2.35 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி இருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதேபோல் விவசாய நிலமாக 150 ஏக்கர் நிலத்தையும், விவசாயம் அல்லாத 11 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் வைத்துள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் அதிர்ச்சி..!! கொரோனாவுக்கு ஒருவர் பலி..!! பீதியில் பொதுமக்கள்..!!

Fri Dec 29 , 2023
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருப்பினும் ஆய்வுகளின்படி, ஜே.என்.1ல் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு […]

You May Like