இந்தாண்டின் ஏப்ரல் மாதம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், மே மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பண பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்தல் போன்றவற்றில் வங்கிகள் பொதுமக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன.
விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்படுவதால், வாடிக்கையாளர்கள் முக்கியமான வேலைகளை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, மக்கள் தங்கள் வங்கிச் செயல்பாடுகளைத் திட்டமிட உதவுவதற்காக, மே 2024-க்கான வங்கி விடுமுறைப் பட்டியலை பொதுமக்கள் சரிபார்த்து வங்கி பணிகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அதன்படி, தமிழ்நாட்டில் மே மாதம் மொத்தம் 7 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தின விடுமுறையாகும். இத்துடன் (மே 5, 12, 18, 26) ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது (மே 11), நான்காவது (மே 25) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Read More : ’மே 1 முதல் ஜாக்கிரதையா இருங்க’..!! இந்த மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!! – வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்