Elon Musk:கடந்த 15ஆம் தேதி புளோரிடாவின் பாம் பீச்சிலுள்ள தனது மார் எ லாகோ எஸ்டேட்டில் டொனால்ட் டிரம்ப் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார். அந்த டின்னருக்கு ஒரு இருக்கைக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1 மில்லியன் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது
இந்த விருந்து நிகழ்ச்சியில் எலான் மஸ்க் தனது சுண்டு விரலில் 2 ஸ்பூன் மற்றும் ஒரு ஃபோர்க்கை கொண்டு சாகசம் செய்துள்ளார். அதாவது, 2 ஸ்பூன் மற்றும் ஒரு ஃபோர்க்கை தனது சுண்டு விரலில் நிறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது டிரம்ப் மற்றும் ஷிவோன் ஜிலீஸ் ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தனர். பல ஊடகச் செய்திகளின்படி, இந்த இரவு உணவிற்கான விலை இந்தியாவில் குறைந்தது 40 ஸ்கார்பியோ கார்கள் வாங்க முடியும். அதாவது, ஒரு காரின் சராசரி விலை ரூ. 20 லட்சமாகும்.
இந்த இரவு விருந்துக்கான நோக்கம் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட விருந்துக்கான அழைப்பிதழில் MAGA INC என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தாக கூறப்படுகிறது. இந்த இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த வீடியோவில், மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ், தனது நான்கு குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டிருந்தார். மஸ்கின் கல்லூரி யுக்திக்கு ஷிவோன் சிலிஸ் எப்படி எதிர்வினையகக் கொண்டார் என்பது குறித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். “எலோன் தனது சமநிலைப்படுத்தும் திறனைக் காட்டுகிறார், அதே நேரத்தில் சிவோன் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளும் விதமாக அசைந்து கொண்டிருக்கிறார், ஏதோ எல்லாம் சரியென்று நினைத்துக் கொள்கிறார் போல.” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். தகவல்கள் படி, அந்த இரவு உணவுக்கு ஒரு இருக்கை பெறுவதற்கு 1 மில்லியன் டாலர் (சுமார் 8.3 கோடி) செலவு ஆகும்.
ஷிவான் சிலிஸ் யார்?
ஷிவான் சிலிஸ் சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில், தன் நான்காவது குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிவித்துள்ளார். நவம்பர் 2021 காலத்திலேயே நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சிலிஸ் மற்றும் மஸ்க் இரட்டைய குழந்தைகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், எலோன் மஸ்க் 14 குழந்தைகளுக்கு தந்தையானார். அவர்களின் புதிதாக பிறந்த மகன், செல்டன் லைகர்கஸ் முன்னர், இந்த தம்பதிக்கு இளைய மகளான ஆர்கேடியா மற்றும் இரட்டை குழந்தைகளாக ஸ்ட்ரைடர், அசூர் இருந்தனர்.
Readmore: இரவில் நாய்கள் அழுதால் யாராவது இறந்துவிடுவார்களா..? உண்மை காரணம் என்ன..?